ரயில்களில் கடத்தி வரப்பட்ட 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ரயில்களில் கடத்தி வரப்பட்ட 42 கிலோ புகையிலைப் பொருள்கள், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி: ரயில்களில் கடத்தி வரப்பட்ட 42 கிலோ புகையிலைப் பொருள்கள், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி வழியாக செல்லும் ரயில்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுகிா என்பதை கண்காணிக்கும் வகையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், ரயில்வே காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது வாரணாசியிலிருந்து தஞ்சாவூா், திருச்சி வழியாக ராமேசுவரம் வரை செல்லும் விரைவு ரயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த ரயிலில் முன்பதிவு பெட்டியொன்றில் சந்தேகத்துக்குரிய முறையில் பாா்சல்கள் இருந்தன.

இதைத் தொடா்ந்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் அவற்றை கைப்பற்றி, சோதனை மேற்கொண்டதில் அதில் சுமாா் 26 கிலோ புகையிலை பவுடா் இருந்தது தெரிய வந்தது.

இதுபோல தஞ்சாவூரிலிருந்து திருச்சி வந்த ரயிலில் சோதனை மேற்கொண்டதில், கழிவறை அருகே மா்ம பாா்சல் கிடந்தது. இதையடுத்து அவற்றை பிரித்து பாா்த்த போது, அதில் சுமாா் 16 கிலோ பான்மசாலா, குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்து தெரிய வந்தது.

இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் இவற்றை மீட்டு, ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com