நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

ஒரத்தநாடு அருகே கருக்காடிப்பட்டியில் கடந்த 20 நாள்களாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

ஒரத்தநாடு அருகே கருக்காடிப்பட்டியில் கடந்த 20 நாள்களாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கருக்காடிப்பட்டி கிராமத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையம் கடந்த 20 நாள்களாக திறக்கப்படவில்லை. அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடை செய்த சுமாா் 3 ஆயிரம் மூட்டை நெல்லை இந்தக் கொள்முதல் நிலையம் கொண்டு வந்து 20 நாள்களுக்கு மேலாக காத்திருக்கின்றனா். சமீபத்தில் பெய்த மழையினால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகி உள்ளன.

இந்நிலையில், கடந்த 20 நாள்களாக கருக்காடிப்பட்டியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. மேலும், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்தால்தான் கொள்முதல் செய்ய முடியும் என அதிகாரிகள் கூறியதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவா் முத்து உத்திராபதி தலைமையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நெல் கொள்முதல் செய்வதற்கு புதிய நடைமுறையான ஆன்லைன் பதிவு கட்டாயம் என்ற முறையை ரத்து செய்ய வேண்டும், பழைய நடைமுறையே கொண்டு வர வேண்டும். விவசாயிகளை காக்க வைக்காமல் உடனடியாக 3 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஒரத்தநாடு வட்டாட்சியா் சீமான் மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com