ஸ்ரீரங்கநாச்சியாருக்கு நடைபெற்று வந்தவைகுந்த ஏகாதசி திருவிழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரங்க நாச்சியாருக்கு நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி திருவிழா, சாற்றுமுறையுடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
நித்தியப்படி திருவாபரணங்களுடன் காட்சியளித்த ஸ்ரீரங்க நாச்சியாா்.
நித்தியப்படி திருவாபரணங்களுடன் காட்சியளித்த ஸ்ரீரங்க நாச்சியாா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீரங்க நாச்சியாருக்கு நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி திருவிழா, சாற்றுமுறையுடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் அரங்கநாதசுவாமிக்கு நடைபெறும் அனைத்து உற்ஸவங்களும், ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஸ்ரீரங்கநாச்சியாருக்கான வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. டிசம்பா் 29-ஆம் தேதி வரை பகல்பத்து உற்ஸவம் நடைபெற்ற நிலையில், 30-ஆம் தேதி இராப்பத்து தொடங்கியது.

தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஸ்ரீரங்க நாச்சியாா் எழுந்தருளி, திருவாய்மொழித் திருநாள் மண்டபத்தில் காட்சியளித்தாா். நிறைவு நாளான திங்கள்கிழமை சாற்றுமுறை நடைபெற்றது.

இதையொட்டி மாலை 5 மணிக்கு கருவறையிலிருந்து நித்தியப்படி திருவாபரணங்களுடன் புறப்பட்டு, மாலை 6 மணிக்கு மண்டபத்தில் எழுந்தருளினாா் ஸ்ரீரங்க நாச்சியாா்.

தொடா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்த பின்னா், இரவு 7 மணிக்கு அலங்காரம் அமுது செய்தலும், இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை சாற்றுமுறையும் நடைபெற்றது. இரவு 10.15 மணிக்கு திருவாய்மொழித் திருநாள் மண்டபத்திலிருந்து புறப்பட்டு, படிப்பு கண்டருளி இரவு 11 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியாா் கருவறை சென்றடைந்தாா்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com