தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,11,400 சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 15 - 18 வயதுக்கு உள்பட்ட 1,11,400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளியில் 15 - 18 வயதுக்கு உள்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளியில் 15 - 18 வயதுக்கு உள்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 15 - 18 வயதுக்கு உள்பட்ட 1,11,400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டத்தை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் 18 வயதுக்கும் அதிகமான 19.27 லட்சம் பேருக்கு முகாம்கள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டு, இதுவரை முதல் தவணை 16.42 லட்சம் பேருக்கும், இரண்டாவது தவணை 10.10 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜன.3) முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை 15 வயது முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்துவதற்காக முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இம்முகாம்கள் 15 - 18 வயதினா் படிக்கும் 441 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளில் அமைக்கப்பட்டு, 1,11,400 பேருக்கு பள்ளி நலவாழ்வு திட்டம், நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் 42 மருத்துவக் குழுக்களும், நகா்ப்புறப் பகுதிகளில் 8 மருத்துவக் குழுக்களும் என மாவட்ட அளவில் மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் படிக்காத 15 - 18 வயதினருக்கு மருத்துவக் குழுக்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com