திருச்சி மாவட்டத்தில் 23.46 லட்சம் வாக்காளர்கள்!

9 பேரவைத் தொகுதிகளில் 23 லட்சத்து  46 ஆயிரத்து  39 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 23.46 லட்சம் வாக்காளர்கள்!
திருச்சி மாவட்டத்தில் 23.46 லட்சம் வாக்காளர்கள்!

புதிய சேர்க்கை- 34,677 நீக்கம்- 30,760

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 23 லட்சத்து  46 ஆயிரத்து  39 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிதாக 34,677 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  30,760 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

பின்னர், ஆட்சியர் சு. சிவராசு, செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த நவம்பர் 1-ஆம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 தொகுதிகளிலும் சேர்த்து 23,42,119 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

பின்னர், நடைபெற்ற தொடர் திருத்தத்தின்போதும், சிறப்பு சுருக்கமுறை திருத்தத்ததிலும்பட்டியல் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில்,  இரட்டைப் பதிவு, முகவரி மாற்றம், மரணமடைந்தோர் அடிப்படையில் 30,760 பேர் நீக்கப்பட்டுள்ளனர். திருவெறும்பூர், பொன்மலை பகுதிகளில் பெல் நிறுவனம், பாதுகாப்பு தொழிற்சாலை, ரயில்வே பணிமனைகளில் பலர் இடமாற்றம் செய்துள்ளதால் அரசியல் கட்சிகள் அளித்த மனுக்களின்படி விசாரணை நடத்தி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், புதிதாக 34,677 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  18 முதல் 19 வயதுக்குள்பட்டவர்கள். இறுதி வாக்காளர் பட்டியலின்படி 9 தொகுதிகளிலும் 11,35,752 ஆண் வாக்காளர்கள், 12,10,000 பெண் வாக்காளர்கள், 284 திருநங்கைகள் என மொத்தம் 23.46லட்சம் பேர் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர் என்றார் ஆட்சியர்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட வருவாய் அலுவலர் த. பழனிகுமார், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான், தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com