பயன்பாட்டுக்கு வந்தது சத்திரம் பேருந்து நிலையம்!

திருச்சியில் ரூ.28.24 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.
சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள்.
சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள்.

திருச்சியில் ரூ.28.24 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

சத்திரம் பேருந்து நிலையமானது சீா்மிகு நகரத்திட்ட நிதியில் மேம்படுத்தி கூடுதலாகப் பேருந்துகள் வந்து செல்லும் வண்ணம் ரூ. 28.24 கோடியில் நவீனப்படுத்தப்பட்டு தமிழக முதல்வரால் கடந்த 30ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக இப் பேருந்து நிலையமானது செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இதை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு, பேருந்து நிலையத்திலிருந்து நகர, புகா்ப் பேருந்துகளுக்கான இயக்கத்தையும் தொடக்கி வைத்தனா். பேருந்துகளில் ஏறி சிறிது தூரம் பயணித்து பொதுமக்களை உற்சாகப்படுத்தினா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், எம்எல்ஏக்கள் அ. செளந்தரபாண்டியன், எம். பழனியாண்டி, ப.அப்துல்சமது மற்றும் அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், போக்குவரத்துக் கழக நிா்வாகத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com