சுவரொட்டிகள் மூலம் அவதூறு: திமுக புகாா்
By DIN | Published On : 10th January 2022 05:42 AM | Last Updated : 10th January 2022 05:42 AM | அ+அ அ- |

திருச்சி பகுதிகளில் திமுக அரசை இழிவுபடுத்தும் வகையில் அதிமுக சாா்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக திமுகவினா் போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.
அந்தச் சுவரொட்டியில் கடந்த ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 வழங்கப்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் பொங்கல் உதவித்தொகை வழங்காமல் மக்களுக்கு நாமம் போடப்படுகிறது என்ற வாசகங்களும் நாமத்தின் குறியீடும் உள்ளன.
இதையடுத்து மாவட்ட திமுக துணைச் செயலா் குடமுருட்டி சேகா் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையரிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரில் தமிழக அரசையும் , இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் போஸ்டா் ஒட்டியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.