இன்று தடுப்பூசி முகாம்கள்

திருச்சி மாவட்டத்தில் 101 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் திங்கள்கிழமை  நடைபெறுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் 101 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் திங்கள்கிழமை  நடைபெறுகின்றன.

மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிகள், அங்கன்வாடிகள், அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள், பூங்காக்கள் உள்பட 36 இடங்களில் நடைபெறும் முகாம்களில் 3,270  பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.  

புகரில் திருவெறும்பூா், மணிகண்டம், அந்தநல்லூா், மணிகண்டம், மணப்பாறை, அந்தநல்லூா், வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தாத்தையங்காா்பேட்டை, தொட்டியம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள்  உள்ளிட்ட 65  இடங்களில் நடைபெறும் முகாம்களில் 25,950 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com