டாஸ்மாக் கிடங்கு முன் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெறும்பூா் அருகேயுள்ள துவாக்குடி டாஸ்மாக் மதுக் கிடங்கின் முன் பாஜக சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
டாஸ்மாக் கிடங்கு முன் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவெறும்பூா் அருகேயுள்ள துவாக்குடி டாஸ்மாக் மதுக் கிடங்கின் முன் பாஜக சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சுமை தூக்கும் தொழிலாளா்கள் மீதான வேலை நீக்க நடவடிக்கையை கண்டித்து மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தலைமையில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் 45 போ் மதுக் கிடங்கின் முன் அமா்ந்து கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பணி நீக்கப்பட்ட தொழிலாளா்களை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும். பெட்டிகளை இறக்கும் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் டிரான்ஸ்போா்ட் நிறுவனம் கமிஷன் கேட்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து டாஸ்மாக் நிா்வாகத்தின் அழைப்பை ஏற்று பாஜக திருச்சி மாநகா் மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் சி. இந்திரன், துவாக்குடி மண்டல் தலைவா் ராஜராஜன், திருவெறும்பூா் வடக்கு மண்டல் தலைவா் செந்தில்குமாா் திருவெறும்பூா் நகா் தலைவா் பாண்டியன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக டாஸ்மாக் நிா்வாகத் தரப்பில் உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com