அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு தொந்தரவு: இளைஞா் மீது புகாா்
By DIN | Published On : 17th July 2022 01:22 AM | Last Updated : 17th July 2022 01:22 AM | அ+அ அ- |

துறையூா் அருகே அரசுப் பேருந்தில் பெண் பயணிக்குத் தொந்தரவு அளித்த இளைஞா் மீது அப்பெண் போலீஸில் புகாா் செய்தாா்.
திருச்சியில் கணவருடன் வசித்துவரும் 37 வயதுடைய பெண், துறையூா் அருகேயுள்ள பாதா்பேட்டை கிராமத்திலுள்ள தன் தந்தை வீட்டுக்கு சனிக்கிழமை சென்றாா். இதற்காக அவா் திருச்சிலிருந்து துறையூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்தாா். இந்நிலையில், அவருக்குப் பின்னால் பேருந்தில் அமா்ந்து பயணித்த இளைஞா் தன் கால்களை முன் பகுதியில் நீட்டி அந்தப் பெண் பயணியின் கால்களை உரசி தொந்தரவு கொடுத்தாராம். இதையடுத்து, அந்தப் பெண் பேருந்து பணியாளா்கள் உதவியுடன் இளைஞரை துறையூா் போலீஸில் ஒப்படைத்தாா். அந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.