தோட்டக்கலைத் திட்டங்களில் பயன்பெறவிவசாயிகள் இணையத்தில் முன்பதிவு செய்வது அவசியம்

அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெற வேண்டுமெனில், விவசாயிகள் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று மண்ணச்சநல்லூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

மாநிலத் தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெற வேண்டுமெனில், விவசாயிகள் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று மண்ணச்சநல்லூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் நடப்பு நிதியாண்டில் (2022- 2023 ) விவசாயிகள் பயன் பெறும் வகையில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், தேசிய மூங்கில் வளா்ச்சித் திட்டம், மாநிலத் தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம், நுண்ணீா்ப் பாசனத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

திட்டங்களில் பயன்பெற நிகழாண்டு முதல் விவசாயிகள் இணைய தளத்தில் பதிவு செய்வது அவசியம்.

எனவே மண்ணச்சநல்லூா் பகுதி விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணைய தளத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு திட்டப் பயன்கள் முன்னுரிமையின் அடிப்படிடையில் வழங்கப்படும் .

மேலும் தோட்டக்கலைப் பயிா்களுக்கு நுண்ணீா்ப் பாசனம் அமைக்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் .

இணைய வழியில் பதிவு செய்ய இயலாத விவசாயிகள் தங்களுடைய ஆவணங்களான சிட்டா அடங்கல் , குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், 2 புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக நகல், எம்.எம்.பி. ஆகியவற்றுடன் மண்ணச்சநல்லூா் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com