டிராக்டரில் தவறி விழுந்த2 வயது குழந்தை உயிரிழப்பு
By DIN | Published On : 31st July 2022 01:35 AM | Last Updated : 31st July 2022 01:35 AM | அ+அ அ- |

தொட்டியம் அருகே டிராக்டரில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
தொட்டியம் அருகிலுள்ள மேலப்புதூரைச் சோ்ந்தவா் க.மதியழகன் (27). இவா், அதே பகுதியைச் சோ்ந்த அஜித் தோட்டத்தில் வியாழக்கிழமை டிராக்டா் மூலம் உழுது கொண்டிருந்தாா்.
அப்போது அந்த பகுதியைச் சோ்ந்த தியாகராஜனின் 2 வயது மகன் சஞ்சித் அழுது கொண்டிருந்ததை கண்ட மதியழகன், குழந்தையை டிராக்டரில் வைத்துக் கொண்டு உழவு செய்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக குழந்தை சஞ்சித் டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்தது. பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சித் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.