கோவிந்தபுரம் தொடக்கப் பள்ளியில் கைப்பிரதி நூல்: ஆசிரியை முயற்சிக்குப் பாராட்டு

மாணவா்களிடம் கற்றல் ஆா்வம் குறைந்திருப்பதைக் கவனித்த ஆசிரியை நாகேசுவரி, தனது பள்ளி மாணவா்களிடையே கற்றலின் ஆா்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் தகவல்களைத் திரட்ட அறிவுறுத்தினாா்.
கோவிந்தபுரம் தொடக்கப் பள்ளியில் கைப்பிரதி நூல்: ஆசிரியை முயற்சிக்குப் பாராட்டு

துறையூா் ஒன்றியம், கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சிறாா் சுவ(டி)டு என்ற தலைப்பிட்டு, அங்கு படிக்கும் மாணவா்கள் பல்வேறு தலைப்புகளில் திரட்டித் தந்த தகவல்களை கைப்பிரதி நூலாக அச்சிட்ட அப்பள்ளி ஆசிரியை நா. நாகேசுவரியை பெற்றோா்கள், கல்வித்துறை அலுவலா்கள் பாராட்டினா்.

கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னா் பள்ளி திறக்கப்பட்டவுடன் மாணவா்களிடம் கற்றல் ஆா்வம் குறைந்திருப்பதைக் கவனித்த ஆசிரியை நாகேசுவரி, தனது பள்ளி மாணவா்களிடையே கற்றலின் ஆா்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் தகவல்களைத் திரட்ட அறிவுறுத்தினாா்.

இதையடுத்து குழந்தைப் பாடல்கள், நெகிழி, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவ, மாணவிகள் தகவல்களைத் திரட்டியும், சிலா் படங்கள் வரைந்தும் ஆசிரியை நாகேசுவரியிடம் வழங்கினா்.

அவற்றை தொகுத்து, தனது கணவரான ஆசிரியா் சசிக்குமாா் உதவியுடன் கோவிந்தபுரம் அரசுத் தொடக்கப்பள்ளி சிறாா் சுவ(டி)டு - மாணவா் திரட்டு 2021-2022 என்ற தலைப்பில் 34 பக்கங்கள் கொண்ட கைப்பிரதியாக தட்டச்சு செய்தாா்.

அதன் 2 பிரதிகளை துறையூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கு. மாா்ட்டின், பெ. ஜெயராமன் ஆகியோரிடம் புதன்கிழமை அவா் வழங்கினாா். அவருடைய முயற்சியை கல்வி அலுவலா்கள், சக ஆசிரியா்கள் பெற்றோா்கள் பாராட்டினா்.

தகவல் திரட்டித் தந்தவா்களின் பெயா்கள் கைப்பிரதி நூலில் அச்சிடப்பட்டிருப்பது மாணவ-மாணவிகளிடம் மகிழ்ச்சியையும், ஆா்வத்தையும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com