எண்ணும் எழுத்தும் பயிற்சியை நிறுத்த வேண்டும்: ஆசிரியா்கள் சங்கங்கள் வலியுறுத்தல்

 கோடை விடுமுறையில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் பயிற்சியை நிறுத்த வேண்டும்

 கோடை விடுமுறையில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் பயிற்சியை நிறுத்த வேண்டும் என தொடக்க மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுச் செயலா்

வீ.எஸ். முத்துராமசாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச்

செயலா் ச. மயில் ஆகியோா் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் மே 21-ஆம் தேதி முதல் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13-ஆம் தேதி மீண்டும்

பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன்படி 23 நாள்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கோடை விடுமுறை அளவைவிட குறைவான நாள்களாகும். 2021-22 -ஆம்

கல்வியாண்டில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவா்கள் தாமதமாகப் பள்ளிகளுக்கு வருகை புரிந்தாலும், ஆசிரியா்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாள்கள் 220 நாள்களைத் தாண்டியுள்ளது. இது வழக்கமான ஆண்டின் வேலை நாள்களை விடக் கூடுதலாகும்.

இச்சூழலில் 2021-22ம் கல்வியாண்டில் அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாள்களிலும் ஜூன் 1, 2-ஆம் தேதிகளில் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கருத்தாளா் பயிற்சியும், 1 முதல் 3-ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு ஜூன் 6 முதல் 10-ஆம் தேதி

வரை எண்ணும் எழுத்தும் பயிற்சியும் தமிழ்நாடு முழுவதும் வழங்கிட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோடைவிடுமுறையில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் கோடை விடுமுறையைத் துய்க்கும் பிரிவினராவா். இதனாலேயே அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவது போல் ஆசிரியா்களுக்கு ஆண்டுக்கு 30 நாள்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப் படுவதில்லை. 15 நாள்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

எனவே இக்கல்வியாண்டில் ஆசிரியா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாள்களையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையாக எண்ணும் எழுத்தும் பயிற்சி அமைந்துள்ளது. எனவே கோடையில் நடத்தப்படும் எண்ணும் எழுத்தும் பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com