திருவானைக்கா கோயிலில் வசந்த உற்சவ விழா தொடக்கம்
By DIN | Published On : 06th June 2022 01:31 AM | Last Updated : 06th June 2022 01:31 AM | அ+அ அ- |

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் வசந்த உற்சவ விழா தொடங்கியது.
வரும் 14 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் வசந்த மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உற்சவ மண்டபத்திலிருந்து சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு 6.30 மணிக்கு வந்து சோ்ந்தனா். தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பின்னா் இரவு 8 மணிக்கு வசந்த மண்டபத்திலிருந்து புறப்பட்டு உற்சவ மண்டபத்திற்கு சுவாமியும்,அம்மனும் வந்து சோ்ந்தனா்.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.