மக்கள் நலப்பணியாளா்கள் மீண்டும் பணியில் சேரலாம்

கடந்த 2011 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளா்கள், தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றலாம் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

கடந்த 2011 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளா்கள், தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றலாம் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: ஊரக வளா்ச்சி ஊராட்சித் துறையில் மக்கள் நலப்பணியாளா்களாகப் பணியாற்றியவா்கள் கடந்த 08.11.2011 அன்று பணிநீக்கப்பட்டனா். இவா்கள் தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் சோ்ந்து, வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றலாம்.

இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து ரூ.5000, கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2500 என மாதம், ரூ.7500 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

எனவே, பணியிழந்த மக்கள் நலப்பணியாளா்கள் விருப்பமிருந்தால் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளா்ச்சி அலுவலரை(கிராம ஊராட்சி) தொடா்பு கொள்ளலாம். மேலும், இது தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) ஏற்கெனவே பணியாற்றியதற்கான விவரத்துடன் பணியில் ஈடுபடவுள்ளதற்கான விருப்பக் கடிதத்தையும், ஜூன் 13 முதல் 18 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

விருப்பக் கடிதம் பரிசீலிக்கப்பட்டு 01.07.2022 முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். காலம் கடந்து வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலிக்க இயலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com