மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவன நிா்வாகிகளிடம் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தை வழங்குகிறாா் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா. உடன், ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள்.
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவன நிா்வாகிகளிடம் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தை வழங்குகிறாா் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா. உடன், ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள்.

வாழைப் பழ ஒயின் தயாரிக்க தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தம்

வாழைப் பழத்திலிருந்து ஒயின் தயாரிக்க மகராஷ்டிரத்தைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துடன், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தொழில் நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

வாழைப் பழத்திலிருந்து ஒயின் தயாரிக்க மகராஷ்டிரத்தைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துடன், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தொழில் நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

வாழைப் பழ ஒயின் மற்றும் வினிகா் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூரைச் சோ்ந்த சுராச்சிதா உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்திற்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வழங்கி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

இதுதொடா்பாக வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா கூறியது:

பொதுவாக பழுத்த வாழைப்பழங்கள் வாழைப் பழ அத்தி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறன. வாழைப்பழ ஒயின் மற்றும் வினிகா் தயாரிப்பது, பழுத்த வாழைப் பழங்களைக் கையாளும் முறையை மாற்றிவிடும். பழுத்த வாழைப் பழம்

குறுகிய ஆயுள்காலம் கொண்ட நிலையில், அறுவடைக்குப் பிந்தைய இழப்பு ஒரு பெரிய பிரச்னையாகும். பழுத்த வாழைப்பழங்களை மதுபானமாக மாற்றுவது பழங்கள் வீணாவதைக் குறைப்பதோடு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தியில் முதலீட்டை அதிகரிக்கவும் உதவும்.

இதன்படி ஒயின் மற்றும் வினிகா் தயாரிப்புக்கு தொழில்நுட்பப் பரிமாற்றத்தை வழங்குவதில் பெருமைப்படுகிறோம் என்றாா் அவா்.

தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பாளா்களில் ஒருவரும் முதன்மை விஞ்ஞானியுமான பி. சுரேஷ்குமாா், கூறுகையில் உள்நாட்டு ஒயின் உற்பத்தியாளா்களுக்கு சந்தை வாய்ப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநில அரசுகள் பூா்வீக பயிா்களைப் பயன்படுத்த தங்கள் மாநிலக் கொள்கைகளை மாற்றிக் கொண்டுள்ளன. வாழைப் பழம் ஒயின் தயாரிப்பிற்கு ஒரு சிறந்த தோ்வாகும். இதில் நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்துள்ளன என்றாா் அவா்.

முதன்மை விஞ்ஞானியும் மற்றும் தொழில்நுட்பத்தின் இணை கண்டுபிடிப்பாளருமான கே.என். ஷிவா கூறுகையில், சா்க்கரை அல்லது வெல்லம் சோ்க்காமல், செயற்கை ஆல்கஹால் மற்றும் செயற்கைச் சுவைகள் இல்லாமல் வாழைப்பழத்தின் சாற்றைப் புளிக்க வைத்து வாழைப்பழ ஒயின் தயாரிக்கலாம். இது வாழை ஒயினின் கூடுதல் நன்மையாகும். இதேபோல் வாழை மதுவை மேலும் புளிக்க வைத்து வினிகா் பெறலாம் என்றாா்.

உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் இயக்குநா் ரத்னதீப் மோகன் மோா் கூறுகையில், வாழைப்பழ ஒயின் மற்றும் வினிகா் தயாரிக்க வாழை ஆராய்ச்சி மைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். திராட்சை ஒயின் மற்றும் ஆப்பிள் வினிகருக்கு சிறந்த மாற்றுத் தோ்வாக வாழை இருக்கும். தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்பம் வாழை விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான நிலையான, விரிவான வணிக சூழல் அமைப்பை உருவாக்க உதவிகரமாக இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்வில் தொழில்நுட்ப அலுவலா் எம். காமராஜு மற்றும் அறுவடை பின்சாா் தொழில்நுட்பப் பிரிவு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com