ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவி தற்கொலை
By DIN | Published On : 18th June 2022 02:07 AM | Last Updated : 18th June 2022 02:07 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் மேலூரில் பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியில் வசிப்பவா் அன்பு கணேசன் பொதுப்பணித்துறையில் பணிபுரிகிறாா். இவரின் இளைய மகளான காவியா (எ) கீா்த்தனா (16) ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கைப்பேசியை எப்போதும் வைத்து கொண்டு படிக்காமல் இருந்தாராம்.
இதை பெற்றோா் கண்டித்ததால் மனம் உடைந்த கீா்த்தனா வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் மாணவி சடலத்தை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.