மணப்பாறை அடுத்த கள்ளிப்பட்டி கோயில் திருவிழாவில் வெடி வெடித்ததில் 3  குழந்தைகள்  உள்பட 7 பேர் காயம்

மணப்பாறை அடுத்த கள்ளிப்பட்டி கோயில் திருவிழாவில் வெடி வெடித்ததில் 3  குழந்தை  உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மணப்பாறை: மணப்பாறை அடுத்த கள்ளிப்பட்டி கோயில் திருவிழாவில் வெடி வெடித்ததில் 3  குழந்தை  உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம்  மணப்பாறை அருகே உள்ள கள்ளிக்குடி மாரியம்மன் கோவில் வைகாசி  திருவிழா அதிவிமர்சையாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று இரவு கரகம் பாலித்து அம்மன் ஆலயம் புகும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  

விடியற்காலை திருவிழாவில் வானவேடிக்கை நடைபெற்றது. இதில் எண்ணற்ற வகையான வானவெடிகள் வெடித்தனர். அப்போது தோரண வெடிகள் வெடித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக பொதுமக்கள் கூடியிருந்த கூட்டத்திற்குள் வெடிகள் வெடித்து சிதறியது. 

இதில் 3 குழந்தைகள் காவியா 12,  சர்மிளா 14, சர்வினி - 10 மற்றும் சத்யா - 27, கோபிகா - 13, பானுதி - 36, பாஸ்கரன் - 57 என 7 பேர் காயமடைந்தனர். உடனடியாக அனைவரையும் அருகிலிருந்தவர்கள்  மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com