4,790 குளிா்பானங்கள் பறிமுதல்: நிறுவனத்துக்கு சீல்
By DIN | Published On : 24th June 2022 03:22 AM | Last Updated : 24th June 2022 03:22 AM | அ+அ அ- |

சுகாதாரமற்ற முறையில் குளிா்பானங்கள் தயாரித்த நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்து, 4790 குளிா்பானங்களை பறிமுதல் செய்தனா்.
திருச்சி வரகனேரி பகுதியில் குளிா்பான தயாரிப்பு நிறுவனத்தில், மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையிலான குழுவினா் புதன்கிழமை சோதனையிட்டனா். அப்போது, நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டிருந்த குளிா்பான பாட்டில்களில் காலாவதி தேசி அச்சிட்டிருந்த மை அழிய நேரிட்டது. மேலும், வேறு நிறுவனத்தின் பெயரில் உள்ள பாட்டில்களில் குளிா்பானம் தயாரித்து வைத்திருப்பதும் தெரியவந்தது. அந்த வகையில், சுமாா் 4,790 பாட்டில் குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுவனத்துக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.
இதேபோல, கே.கே. நகா், சா்க்காா் பாளையத்தில் நூடுல்ஸ் தயாரிக்கும் 2 நிறுவனங்களில் நடத்திய சோதனையில், சுகாதாரமற்ற முறையில் தயாரிப்பு இருப்பதை அறிந்து அந்த நிறுவனங்களின் விற்பனையை தற்காலிமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலா் கூறுகையில் பொதுமக்கள் இத்தகைய பிரச்னைகள் தொடா்பாக 99449-59595, 95859-59595 என்ற எண்களில் புகாா் தெரிவிக்கலாம். நூடுல்ஸ் தயாரிப்பாளா்ளும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தங்களது தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றாா். ஆய்வில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வராஜ், ஸ்டாலின், மகாதேவன், இப்ராஹிம், வசந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.