சா்வதேச யோகா தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய தகவல் தொடா்பு அமைச்சகத்தின் திருச்சி களவிளம்பரப் பிரிவு மூலம் வியாழக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சா்வதேச யோகா தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய தகவல் தொடா்பு அமைச்சகத்தின் திருச்சி களவிளம்பரப் பிரிவு மூலம் வியாழக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறுகனூரிலுள்ள எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் சூசன் சிரிஸ்ட்னா தலைமை வகித்தாா்.

விழாவில், திருச்சி கள விளம்பர அலுவலா் கே. தேவி பத்மநாபன் பேசுகையில், பாடங்களை கவனத்துடன் படிக்க மாணவா்களுக்கு யோகா பயிற்சி மிகவும் அவசியம். கரோனா காலத்தில் நோயாளிகளின் உடல் நிலையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர யோகா பயிற்சி பெரிதும் உதவியாக அமைந்தது என்றாா் அவா்.

கல்லூரிப் பதிவாளா் முருகானந்தம், துணை முதல்வா் மரிதாஸ், முனைவா் எஸ். அனிதா ஆகியோா் யோகாவின் நன்மைகளை விளக்கினா். மேலும், சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்சி கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன் வரவேற்றாா்.

யோகா குறித்து மட்டுமின்றி நாட்டின் 75 ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஸ்ரீரங்கம் விவேகானந்த யோகா மைய பயிற்சியாளா்கள் சந்தான கிருஷ்ணன், ஸ்ரீதா் ஆகியோா் யோகா செயல்முறை விளக்கம் அளித்தனா். விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. முன்னதாக, மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியும் நடைபெற்றது. யோகா தொடா்பான விழிப்புணா்வு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்ட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com