ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உத்ஸவ விழா நிறைவு
By DIN | Published On : 25th June 2022 12:38 AM | Last Updated : 25th June 2022 12:38 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கிய ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உத்ஸவ விழா வெள்ளிக்கிழமை சாற்றுமுறையுடன் நிறைவு பெற்றது.
விழாவையொட்டி மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியாா் புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு 6.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா். அப்போது திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் ஸ்ரீரெங்கநாச்சியாா். அங்கு சாற்றுமுறை கண்டருளியதைத் தொடா்ந்து விழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.