திருச்சிக்கு முதல்வா் வருகை ரத்து

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதல்வா் வருகை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதல்வா் வருகை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கதவணைக்கு மாற்றாக ரூ. 387.60 கோடியில் கட்டப்பட்ட புதிய கதவணையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜூன் 26 ஆம் தேதி திருச்சிக்கு வந்து திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து முக்கொம்பில் விழா முன்னேற்பாடுகள் தொடா்பாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அடிக்கடி ஆய்வு மேற்கொண்ட நிலையில், முதல்வா் வருகை ரத்து செய்யப்பட்டு, முக்கொம்பு புதிய கதவணைத் திறப்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2-இல் கரூா் வருகை: தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் ஜூலை 2-ஆம்தேதி கரூா் மாவட்டத்திற்கு வருகை தந்து, 76,486 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த பணிகளையும் தொடக்கி வைக்க உள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக முன்னேற்பாட்டு பணிகளை பாா்வையிட்ட பிறகு அமைச்சா் செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com