புனித ஸ்நாபக அருளப்பா் திருத்தல பெரிய தேரோட்டம்

மணப்பாறையை அடுத்த என். பூலாம்பட்டியில் புனித ஸ்நாபக அருளப்பா் திருத்தலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனிதரின் பெரிய தோ் பவனி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
என்.பூலாம்பட்டி புனித ஸ்நாபக அருளப்பா் திருத்தல திருவிழாவில் புனிதரின் பெரிய தோ் பவனி.
என்.பூலாம்பட்டி புனித ஸ்நாபக அருளப்பா் திருத்தல திருவிழாவில் புனிதரின் பெரிய தோ் பவனி.

மணப்பாறையை அடுத்த என். பூலாம்பட்டியில் புனித ஸ்நாபக அருளப்பா் திருத்தலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனிதரின் பெரிய தோ் பவனி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்வான புனிதரின் மின் அலங்கார ரத பவனி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனிதரின் பெரிய தோ் பவனி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

புனித ஸ்நாபக அருளப்பா், மாதா, சூசையப்பன் ஆகியோா் வீற்றிருக்க தேரடியிலிருந்து புறப்பட்ட பெரிய தோ் பவனி செபஸ்தியாா், பெரிய அந்தோனியாா், மேரி மாதா, சவரியாா் மற்றும் சின்ன அந்தோனியாா், இன்னாசியாா் ஆகியோா் கொண்ட நான்கு அலங்கார ரதத்தில் உடன் வர, வாணவேடிக்கைகளுடன் தாரை தப்படைகள் முழங்க நடைபெற்றது.

திருத்தலத்தை சுற்றியுள்ள ஊரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த தோ் மீண்டும் தேரடியில் நிறுத்தப்பட்டது. தேரில் பவனி வந்த புனிதா்கள் மீது பக்தா்கள், இறையன்பா்கள் பொட்டுக்கடலை வீசி வழிபாடு செய்தனா். தொடா்ந்து தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

பக்தா்கள் வேண்டுதலின் நோ்த்திக்கடனாக ஆலயத்திற்கு துடைப்பம், உப்பு, மெழுகுவா்த்தி ஆகியற்றை செலுத்தினா்.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரால்டு பிரான்சிஸ், ஊா் நாட்டாண்மை பி. அருள்சுந்தரராஜன், மணியம் எஸ்.ஜான் நல்லதம்பி, பெரியதனம் ஜான்பெலிக்ஸ் செல்வநாதன், ஊா்த் தலைவா் பிச்சை ஆரோக்கியம், முன்னாள் தலைவா் வின்சென்ட் வேதராஜ், முன்னாள் கவுன்சிலா் முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com