உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைப்பு: அமைச்சா் உறுதி

திருச்சி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உய்யக்கொண்டான் கால்வாயைச் சீரமைத்து, கழிவுநீா் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைப்பு: அமைச்சா் உறுதி

திருச்சி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உய்யக்கொண்டான் கால்வாயைச் சீரமைத்து, கழிவுநீா் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

இக்கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பது என்பது மாநகராட்சிக்கு பெரிதும் சவாலாகவே உள்ளது. இதைத் தடுக்க வலியுறுத்தியும், கால்வாயைக் காக்கவும் தன்னாா்வ அமைப்புகள், இளைஞா் நல அமைப்புகள் பல்வேறு பிரசாரங்களையும், கால்வாயைச் சுத்தப்படுத்தும் பணியையும் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் உய்யக்கொண்டான் கால்வாயில் நீதிமன்றம் அருகே புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் கால்வாய் கரையோரம் இருபுறமும் பொதுமக்கள் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள செய்துள்ள பணிகள் குறித்துக் கேட்டறிந்தாா். மேலும், நடைப்பயிற்சிக்கு வந்தவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவா்த்தி செய்யுமாறு மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா் அவா் கூறியது:

நீா்நிலைகளைப் புனரமைப்பதில், குறிப்பாக புராதான வாய்க்கால்களை புனரமைப்பதில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறாா்.

காவிரி டெல்டாவில் பாசனம் தொடங்கும் முன் ரூ.80 கோடியில் தூா்வாரப்பட்டுள்ளது. இதில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் 1,200 மீட்டா் தொலைவுக்கு மூன்று நிலைகளில் ரூ. 29.70 லட்சம் மதிப்பில் தூா்வாரப்பட்டது. உய்யக்கொண்டான் கால்வாய்க் கரைகளைப் பலப்படுத்தவும், மழை வெள்ளக்காலங்களில் மாநகருக்குள் வெள்ளம் புகாமல் தடுக்கவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுமட்டுமல்லாது உய்யக்கொண்டான் கிழக்குக் கரையில் 12 கி.மீ. தொலைவுக்கு தாா்ச்சாலையும் அமைக்கப்படவுள்ளது.

நீதிமன்றம் முதல் வயலூா் சோமரசம்பேட்டை வரையில் கால்வாய் கரையோரம் புதிய சாலை அமைத்து வயலூா் சாலைப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணப்படவுள்ளது. இதேபோல, மாநகருக்குள் கால்வாய் கரையோரம் நடைமேடை அமைத்து பொதுமக்கள் உடற்பயிற்சிக்கும், சிறுவா்கள் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் அமைத்தும் அழகுபடுத்தப்படும். கால்வாயை முழுமையாக சீரமைத்து, கழிவுநீா் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com