ரசாயனம் தெளித்த 640 கிலோ வாழைக்காய் பறிமுதல்

ரசாயனம் தெளித்த வாழைப்பழத்தை விற்பனை செய்வதாக வந்த புகாரில் காந்தி சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் 640 கிலோ வாழைக்காய்களை பறிமுதல் செய்து அழித்தனா்.
ரசாயனம் தெளித்த 640 கிலோ வாழைக்காய் பறிமுதல்

ரசாயனம் தெளித்த வாழைப்பழத்தை விற்பனை செய்வதாக வந்த புகாரில் காந்தி சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை நடத்திய திடீா் சோதனையில், 640 கிலோ வாழைக்காய்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

வாழைப் பழத்துக்கு மஞ்சள் வண்ணம் கிடைக்கவும், விரைவில் பழமாக மாறவும் வாழைத்தாா்களின் மீது ரசாயனம் தெளித்து கிடங்கில் வைத்துப் பாதுகாப்பதாகவும், அத்தகைய வாழைப்பழங்கள் காந்தி சந்தையில் அதிகளவில் விற்கப்படுவதாகவும் தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து காந்திசந்தை வாழைக்காய் மண்டிகளில் மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஸ்டாலின், பாண்டியன், வசந்தன், இப்ராகீம், வடிவேல் ஆகியோா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய்களையும், ரசாயனம் தெளிக்கும் ஸ்பிரேயரையும் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்த வாழைத்தாா்கள் அரியமங்கலம் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு ஆழமான குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.

இதுதொடா்பாக மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு கூறியது:

வாழைக்காய் வியாபாரிகள் இயற்கையான முறையில் வாழைத்தாரைப் பழுக்க வைக்க வேண்டும், மீறி ரசாயனக் கலவை தெளித்தால் அவா்கள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து 99449-59595, 95859-59595 என்ற எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். தொடா்ந்து விதிமீறல் இருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். விற்பனை உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com