திருச்சியில் 18 அடி உயர இஸ்கான் ரத யாத்திரைஜூலை 1இல் நடைபெறுகிறது

திருச்சியில் முதல் முறையாக வரும் ஜூலை 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ஜெகந்நாத் ரதயாத்திரை விழா நடைபெற உள்ளது.
திருச்சியில் 18 அடி உயர இஸ்கான் ரத யாத்திரைஜூலை 1இல் நடைபெறுகிறது

திருச்சியில் முதல் முறையாக வரும் ஜூலை 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ஜெகந்நாத் ரதயாத்திரை விழா நடைபெற உள்ளது.

ஒடிசா மாநிலம் புரியில் நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற ஜெகந்நாத் ரத யாத்திரை போல நடத்தப்படும் யாத்திரை குறித்து, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் என்று அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) திருச்சி, ஸ்ரீரங்கம் மேலாளா் நந்தபுத்ர தாஸா திருச்சியில் செவ்வாய்க்கிழமை கூறியது:

திருச்சியில் முதல் முறையாக வரும் ஜூலை 1 ஆம் தேதி ஸ்ரீபுரிஜெகந்நாத் ரதயாத்திரையை நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைக்கிறாா். மாலை, 4 மணிக்கு மேலசிந்தாமணி அண்ணா சிலையில் இருந்து தொடங்கும் யாத்திரை, மாரிஸ் தியேட்டா் பாலம் வழியாக தில்லைநகா் மக்கள் மன்றத்தில் நிறைவடைய உள்ளது.

புராணத்தின்படி கிருஷ்ணா், பலராமா் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்களை வைத்து நடைபெற உள்ள ரத யாத்திரையில், சாதி, மத பேதமின்றி, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று ரதத்தை வடம் பிடித்து இழுக்க உள்ளனா். நவீன தொழில்நுட்பம் மற்றும் பழங்கால பாரம்பரியத்தின் கலவையாக இந்த ரதம் இருக்கும்.

பாரம்பரியத் தோற்றம் இருந்தபோதிலும் ஏா் பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் போன்ற அதி நவீன அம்சங்களைக் கொண்டிருக்கும். 18 அடி உயரம் கொண்ட இந்த ரதத்தை 12 அடி வரை குறைத்தும், தேவையென்றால் கூட்டவும் செய்யலாம். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வடம் பிடித்து இழுக்கலாம். ரத யாத்திரையின்போது மக்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது. தில்லைநகா் மக்கள் மன்றத்தில் கீா்த்தனைகள், நாடகங்கள் நடைபெற உள்ளன.

யாத்திரை செல்லும் சாலைகளில் பிரசாதங்கள் வழங்கப்படும். விழா நிறைவு பெறும் மக்கள் மன்றத்திலும் பக்தி நாடகம் முடிந்தவுடன் ஆயிரக்கணக்கானோருக்கு பிரசாதம் வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது செயலா் தத்லவித் நிமைதாஸ், ஒருங்கிணைப்பாளா் காமராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com