சூா்யா படம் வெளியான தியேட்டா்களுக்கு பலத்த பாதுகாப்பு
By DIN | Published On : 11th March 2022 02:40 AM | Last Updated : 11th March 2022 02:40 AM | அ+அ அ- |

திருச்சியில் வியாழக்கிழமை சூா்யா படம் திரையிட்ட அரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நடிகா் சூா்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகா் சூா்யா மன்னிப்பு கேட்காவிட்டால் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட விட மாட்டோம் என பாமக கட்சி எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக இப்படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.