முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
வயலூா் முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 18 இல் தொடக்கம்
By DIN | Published On : 14th March 2022 05:28 AM | Last Updated : 14th March 2022 05:28 AM | அ+அ அ- |

திருச்சி அருகேயுள்ள குமாரவயலூா் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா மாா்ச் 18 (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
தொடா்ந்து அன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தா்களால் பால் காவடி , அலகு குத்துதல், அபிஷேகம். தொடா்ந்து இரவு முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா, 19 ஆம் தேதி உபயதாரா்களின் அபிஷேகம், 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம், வள்ளிநாயகி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி, 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு வேலன் வேடனாக விருத்தனாக வரும் நிகழ்ச்சி, பின்பு யானை விரட்டல் பின் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
22 ஆம் தேதி காலை 10.30-க்கு மேல் 11.30 மணிக்குள் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும். விழாவை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வயலூா் வரை சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மோகனசுந்தரம், செயல் அலுவலா் அருண்பாண்டியன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.