ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவினா் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவினா் 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

கடந்த, 2012 இல் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், அரியலூா் மாவட்டத் துணைக் காவல் கண்காணிப்பாளா் மதன், சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளா் ரவி ஆகியோா் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழுவானது, ஏற்கெனவே பல்வேறு குழுவினா் விசாரித்து வைத்துள்ள ஆவணங்களின் மீதான மேல் விசாரணையை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கியது. பின்னா் சனிக்கிழமை முதல் திருச்சியில் முகாமிட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி. ஜெயக்குமாா், டிஎஸ்பி மதன் உள்ளிட்டோா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா். இவா்கள் தலைமையிலான 5 தனிப்படையினா் திருச்சியில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கொலை தொடா்பாக பல இடங்களில் ஆய்வு செய்கின்றனா். திங்கள்கிழமையும் ஆய்வு தொடரும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com