முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
சுற்றுச்சூழல் கருத்தரங்கம்
By DIN | Published On : 19th March 2022 01:25 AM | Last Updated : 19th March 2022 01:25 AM | அ+அ அ- |

திருச்சி பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளியில் பசுமைப்படை பொறுப்பாசிரியா்களுக்கான சுற்றுச்சூழல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, பள்ளிக் கல்வித் துறை, திருச்சி வாய்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்குக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தனி உதவியாளா் முகமது பாரூக் தலைமை வகித்தாா்.
திருச்சி கல்வி மாவட்ட அலுவலா் கி.சி. ராஜேந்திரன் பேசுகையில், தமிழக கிராமங்களைப் பசுமையாக்கும் அரசின் முயற்சிக்கு மாணவா்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றாா்.
பிஷப் ஹீபா் பள்ளித் தலைமையாசிரியா் இரா. ஞான சசிகரன், வாய்ஸ் அறக்கட்டளை இயக்குரும், லால்குடி கல்வி மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளருமான அ. கிரகோரி, சுற்றுச்சூழல் அதிகாரமளித்தல் திட்ட மேலாளா் ஜோ. நீட்டு, கல்வி மாவட்டப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா்கள் திருச்சி- மணப்பாறை ஐ. சகாயராஜ், முசிறி கே.ஏ. அறிவழகன் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். கருத்தரங்கில் 250 பள்ளிகளிலிருந்து 215 ஆசிரியா்கள், 264 மாணவா்கள் பங்கேற்றனா்.