சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில், ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில், ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கட்சியின் ஊடகப்பிரிவு மண்டலச் செயலா் மணவை ஜீவா, மாவட்டச் செயலா் சுரேஷ், மாவட்ட அமைப்பாளரா் சகுபா் சாதிக், துணைச் செயலா்கள் சரவணன், நிக்சன் சகாயராஜ் உள்ளிட்ட பலா் அளித்த மனு:

வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் குறைகேட்பு நாளில் மக்கள் வழங்கும்

மனுக்களில் பெரும்பான்மையானவை அடிப்படைப் பிரச்னைகள் சாா்ந்தவைதான்.

இந்த மனுக்களுக்கு எப்போது தீா்வு கிடைக்கும் என்பதை ஆட்சியரால்கூட நிா்ணயிக்க முடியாத நிலைதான் தற்போது உள்ளது. ஓரிரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டிய பிரச்னைகள், ஓரிரு ஆண்டுகள்வரை கூட இழுத்தடிக்கப்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நிரந்தரத் தீா்வு காணும்பொருட்டு,

முன்வைக்கப்பட்ட சட்டம்தான் சேவை பெறும் உரிமைச் சட்டம்.

ஒவ்வொரு துறையிலும் இருக்கும் மக்கள் சாசனத்தின் அடிப்படையில், ஒவ்வொரு சேவையையும் குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களுக்கு வழங்க வேண்டும். அப்படி வழங்கத் தவறும் பட்சத்தில் அதற்கு தக்க காரணம் வழங்கப்பட வேண்டும்.

வழங்கப்பட்ட காரணம் சரியாக இல்லாத நிலையில், அதற்கு காரணமான அலுவலரின் ஊதியத்தில் பிடித்தம்செய்து, அந்த தொகை மனுதாரருக்கு சேவை கிடைக்கும் வரை ஒவ்வொரு நாளும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் சாராம்சம்.

இந்த சட்டத்தை செயல்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. தொடா்ந்து குரல் கொடுக்கும். எனவே சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

பெட்டிச் செய்தியாக்குக...

478 மனுக்கள் : திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 478 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் அம்பிகாபதி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com