மணப்பாறை அருகே சுட்டெரிக்கும் வெயிலில் கிராம சபை கூட்டத்துக்கு வந்த மாற்றுத்திறனாளி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 
மணப்பாறை அருகே சுட்டெரிக்கும் வெயிலில் கிராம சபை கூட்டத்துக்கு வந்த மாற்றுத்திறனாளி

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள பொருள் குறித்து அதிகாரிகள் கூறிய பின்னர்,  மக்களின் தங்கள் கோரிக்கை குறித்த கேள்விகளை கேட்குமாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 

இதையடுத்து மக்கள் தங்கள் பகுதியில் சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், குடிநீர் வசதி, முதியோர் உதவித் தொகை, பேருந்து நிறுத்தம், பேருந்து வசதி, நெல் கொள்முதல் நிலையம் என அடுக்கடுக்கான கேள்விகளை தொடர்ந்து கேட்டனர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு ஒவ்வொரு மக்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் கூறியதுடன் மக்களின் கோரிக்கை குறித்து விரைந்து பரீசிலித்து தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் பேருந்துகள் அனைத்தும் கண்ணுடையான்பட்டி கிராமத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு, நகைச்சுவையாக பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு பழனியில் இருந்து செல்லும் பேருந்தை எப்படியா நிறுத்த முடியும், நான் அந்த துறையின் அமைச்சராக 5 ஆண்டுகள் இருந்தேன். அப்படி பழனி செல்லும் பேருந்தை நிறுத்த சொன்னால் பேருந்தில் இருக்கும் பயணிகள் இப்படி எல்லா இடத்திலும் நின்று போகுது கட்ட வண்டியா என்று கேட்பார்கள் என்று நகைச்சுவையாக கூறி கூட்டத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

முன்னதாக கிராம சபை கூட்டத்தில் கே.உடையாபட்டியைச் சேர்ந்த என்ற மாற்றுத்திறனாளி சுட்டெரிக்கும் வெயிலில் தவழ்ந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கிராம சபை கூட்டத்தில் தவழ்ந்து வந்த மாற்றுத் திறனாளி தனக்கு 3 சக்கர வாகனம் வழங்குவதாக அமைச்சர் கூறினார். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையை பகிர்ந்தார். இதைக் கேட்ட அமைச்சர் கே.என்.நேரு ஓரிரு தினங்களின் வழங்கப்படும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com