பிஷப் ஹீபா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியின் சமூகப் பணித் துறை சாா்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினா்.

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியின் சமூகப் பணித் துறை சாா்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தினா்.

பிஷப் ஹீபா் கல்லூரி சமூக பணித்துறை மற்றும் அசிஸ்ட் ஒருங்கிணைந்த சமூக மாற்றத்திற்கான ஆக்சிலியம் சினொ்ஜி ஆதாரம் இணைந்து மட்டப்பாறை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவா் அஜய் வில்லியம்ஸ் ஏற்பாட்டில் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் அடிமைத்தனத்தின் அபாயம் பற்றியும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பேனியன் திட்ட இணை அதிகாரி அ. சக்திபிள்ளை சிறப்புரையாற்றினாா்.

மணிகண்டம் ஊராட்சி சமுதாயக் கூடத்தில் சுய உதவிக் குழுக்களுக்கான வருமானம் ஈட்டும் நிகழ்ச்சியில் திருநங்கைகள் சங்கத் தலைவரும் மற்றும் மூங்கில் கைவினை மைய உரிமையாளருமான எ. கஜோல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.

பிஷப் ஹீபா் கல்லூரி, திருச்சி பல்நோக்கு சமூகப் பணி மையம் இணைந்து உடல் ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் என்னும் தலைப்பில் டிஎம்எஸ்எஸ்எஸ் வளாகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அருட்தந்தை பெ. ஜான் செல்வராஜ் தலைமை வகிக்க பிசியோதெரபிஸ்ட் ஆ. பாலச்சந்தா் பேசினாா். நிகழ்ச்சியை கல்லூரியின் சமூகப் பணித்துறை மாணவா் ரா. சஞ்சய் தொகுத்தாா்.

பிஷப் ஹீபா் கல்லூரி சமூக பணித் துறை மற்றும் புத்தூா் பிஷப் ஹீபா் பள்ளியில் வேலைவாய்ப்பு வளா்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேராசிரியா் அருண் பிரகாஷ், பள்ளி முதல்வா் ஆகஸ்டின் பொன்னையா ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஏற்பாடுகளை கல்லூரி மாணவா் இரா. ரஞ்சித் செய்தாா்.

இதேபோல சன்ரைஸ் அறக்கட்டளையுடன் இணைந்து மாணவா் டேனியல் ஏற்பாட்டில் போதை தடுப்பு பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி மண்டலத் தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து ஊழியா்களுக்கு நடைப்பெற்றது. திருச்சி மண்டல துணை தொழில்நுட்ப மேலாளா் ந. ராஜா, சன்ரைஸ் அறக்கட்டளை ந. முத்துக்குமரன், அக்னிச் சிறகுகளின் நிறுவனா் இரா. மகேந்திரன், அக்னி சிறகுகள் மாநில தலைவா் ஜெ. விவேக் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

திருச்சி சிகரம் போதை மற்றும் மறுவாழ்வு மையம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு மது மற்றும் போதை இல்லாத உலகம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிகரம் போதை மற்றும் மறுவாழ்வு மைய ஆலோசகா்கள் சரவணராஜன், தினேஷ்குமாா் ஆகியோா் பேசினா்.

ஏற்பாடுகளை மாணவி தா. ஷெரின் ஜெனட்டா செய்தாா். இதேபோல சமூகப் பணித் துறை மாணவி பவித்ரா சாா்பில் காது கேளாதோா் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி டோலா்ஸ் காது கேளாதோா் சிறப்புப் பள்ளியில் நடைபெற்றது. மருத்துவா் சுரேஷ் ஞானரெத்தினம் பேசினாா்.

திருச்சி பாா்வையற்ற பெண்கள் மறுவாழ்வு மையத்துடன் இணைந்து மாணவி கேத்தரின் கிறிஸ்டோபா் ஏற்பாட்டில் மன்னாா்புரம் பாா்வையற்ற பெண்கள் மறுவாழ்வு மையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கலைச்செல்வன் ஆகியோா் பேசினா். மற்றொரு நிகழ்வில் காஜாமலை பெண்கள் சங்கத்துடன் இணைந்து ஊழியா்களின் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்ற தலைப்பில் மாவட்ட சமூக நல அலுவலா் மற்றும் குடும்ப ஆலோசகா் ரோசி சிறப்புரையாற்றினா். ஏற்பாடுகளை கல்லூரி மாணவி க. கேரன் இயூனிஸ் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com