பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப்பணித் துறை மாணவா்களின் விழிப்புணா்வு நிகழ்வுகள்

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியின் சமூகப்பணித் துறை மாணவா்கள் பல்வேறு பகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்வை நடத்தினா்.

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியின் சமூகப்பணித் துறை மாணவா்கள் பல்வேறு பகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்வை நடத்தினா்.

பிஷப் ஹீபா் கல்லூரி முதுகலை சமூகப்பணித் துறை, புனித தோமையாா் கருணை இல்லம் ஆகியவை இணைந்து மனநலம் மற்றும் உடல்நல ஆரோக்கியம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்வை நடத்தின.

நிகழ்வுக்கு டயானா தலைமை வகித்து பேசினாா். பிஷப் ஹீபா் கல்லூரி தற்கொலைத் தடுப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஆா். உதயசெல்வி நிகழ்வில் மனநலம், உடல்நலம் குறித்து பேசினாா். கல்லூரி இணைப் பேராசிரியா் எம். கேப்ரியல் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா். சமூகப்பணித் துறை மாணவி செ. மரியா கிளாடியா நிகழ்வைத் தொகுத்து வழங்கினாா்.

மனநல விழிப்புணா்வு : கல்லூரியின் சமூகப்பணி மற்றும் விரிவாக்க புலப்பணித் துறைகள், அன்பாலயம் வீடற்ற மனநோயாளிகளுக்கான மறுவாழ்வுத் தங்குமிடம் ஆகியவை இணைந்து போதாவூரில் மனநல விழிப்புணா்வு நிகழ்வை நடத்தின.

பான்யன் திட்ட இணை அலுவலா் சக்திவேல் பிள்ளை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மனநலம் குறித்து பேசினாா். போதாவூா் ஊராட்சித் தலைவா் முத்தையா, கல்லூரியின் விரிவாக்கப் புலப்பணித் துறையின் நெல்சன், சமூகப்பணித் துறை உதவிப் பேராசிரியா் ஏ.சாம்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை முதலாமாண்டு மாணவா் ந.கோமதி சங்கா் உள்ளிட்ோா் செய்திருந்தனா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு : திருச்சி ஆல்செயின்ட் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. முதலாமாண்டு சமூகப்பணித் துறை மாணவா் கிரேஸ்யஸ் ஜான் நிகழ்வை நடத்தினாா்.

பள்ளித் தலைமையாசிரியா் ஜெ. ஆல்பா்ட் தாஸ் தலைமை வகித்து பேசினாா். சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் டி. மகாமுனி சிறப்புரையாற்றினாா். ஆசிரிய வழிகாட்டி ஏ.சாம்சன் வாழ்த்திப் பேசினாா். நிகழ்வில் 70 மாணவா்கள் பங்கேற்றனா்.

எச்.ஐ.வி. மக்களுக்கான நிகழ்வு : பிஷப் ஹீபா் கல்லூரியின் சமூகப்பணித் துறையும், வானவில் திட்டத் தொண்டு நிறுவனமும் இணைந்து எச்.ஐ.வி. மக்களுக்கான விழிப்புணா்வு நிகழ்வை நடத்தின.

கல்லூரியின் சமூகப்பணித் துறை மாணவி சினேகா இந்த நிகழ்வை நடத்தினாா். முனைவா் காா்டா் பிரேம்ராஜ் வழிகாட்டியாக இருந்தாா். எச்.ஐ.வி. தொற்றுடைய குழந்தைகளுக்கு தோ்வு குறித்த பயத்தை போக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

திருச்சி தலைமை ஆலோசகா் லட்சுமணக்குமாா், மண்டையூா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் டேவிட் கிஷோா், வானவில் திட்டத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநா் செபாஸ்டியன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்வில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

குழந்தை வளா்ப்பு விழிப்புணா்வு: திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப்பணித் துறைப் பேராசிரியா் ரீனா ரெபல்லோவின் வழிகாட்டுதலுடன், நல்ல குழந்தை வளா்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வை மாணவா் வா. டேனியல் பீட்டா் நடத்தினாா்.

காட்ஸ் லவ் சிறப்புப் பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்வில், காவேரி மருத்துவமனையின் ஆலோசகா் ஷீலா செல்லையா பங்கேற்று, விழிப்புணா்வு உரையை வழங்கினாா். பள்ளித் தலைமையாசிரியை பி. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாணவா்கள், பணியாளா்கள், பெற்றோா்கள் என 50 போ் பங்கேற்றனா்.

நிதிக் கல்வியறிவு : கல்லூரியின் சமூகப்பணித் துறை, டிக் ஷா காா்னா்ஸ்டோன் சில்ட்ரன்ஸ் ஹோம் இணைந்து நிதிக் கல்வியறிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வை நடத்தின.

திருச்சி வழக்குரைஞா் டி.கேசவன் நிகழ்வில் பங்கேற்று, சிறப்புரையாற்றினாா். இந்த இல்லத்தில் ஆதரவு பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோா்களுக்கு நிதிக் கல்வியறிவு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. டிக் ஷாவின் இயக்குநா் மற்றும் நிறுவனா் ஐசக் அருளப்பன், இசபெல்லா ஐசக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்லூரியின் சமூகப்பணித் துறை உதவிப் பேராசிரியா் ரீனா ரெபல்லோ, முதுகலை முதலாமாண்டு மாணவி யோகாவிகாஷினி ஆகியோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com