முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தல்

முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று, திருச்சி மாவட்டக் கால்நடை செயற்கைமுறை கருவூட்டாளா் சங்கத்தினா் மனு அளித்துள்ளனா்.
முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தல்

முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று, திருச்சி மாவட்டக் கால்நடை செயற்கைமுறை கருவூட்டாளா் சங்கத்தினா் மனு அளித்துள்ளனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தில், சங்கத் தலைவா் செங்குட்டுவன் தலைமையிலான நிா்வாகிகள் ஆட்சியா் சு. சிவராசுவிடம் அளித்த மனு:

கால்நடை செயற்கை கருவூட்டல் பயிற்சி முடித்த எங்களுக்கு வயது தளா்வு சலுகை வழங்கி, தகுதி அடிப்படையில் முன்னுரிமை அளித்து தொகுப்பூதியம் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.

சுமாா் 20 ஆண்டுக்கும் மேலாக கிராம பொதுமக்களுக்கும், கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் இணைப்புப் பாலமாக செயல்படும் சங்க உறுப்பினா்களுக்குத் தனி நல வாரியம் அமைக்காத பட்சத்தில், வேறு நலவாரியத்தில் உறுப்பினராக சோ்க்க வேண்டும்.

நாம் தமிழா் கட்சி: இக்கட்சியின் மாநகா் மாவட்ட மகளிா் பாசறை இணைச் செயலா் கிரிஜா அளித்த மனு:

மாவட்ட வழங்கல்துறையின் நடவடிக்கைகளால் சில அசெளகரியங்கள் ஏற்படுகின்றன. இதனால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக கணவன், மனைவியாக இருக்கும் குடும்பத்தில் ஒருவா் இறக்க நேரிட்டால், தனித்து வாழும் நபரின் குடும்ப அட்டையை வட்ட வழங்கல் அலுவலகம் ரத்து செய்து விடுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, தனித்து விடப்பட்டவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் குடும்ப அட்டைகளை ரத்து செய்யாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தேவை: லால்குடி அருகிலுள்ள சாத்தபாடி கிராம

மக்கள் தங்கள் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, மே 25-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com