முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் தங்கம், மின்னணு சாதனப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 03rd May 2022 04:39 AM | Last Updated : 03rd May 2022 04:39 AM | அ+அ அ- |

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் 26 பேரிடமிருந்து சுமாா் 1 கிலோ தங்கம் மற்றும் தடைசெய்யப்பட்ட மின்னணு சாதனப் பொருள்களை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
சிங்கப்பூா், மலேசியா மற்றும் சாா்ஜா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் பயணிகள் மற்றும் அவா்களது உடைமைகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் தங்களது உடைமைகளுக்குள் பயணிகள் மறைத்து வைத்திருந் 1 கிலோ தங்கம் 26 பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட, சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கைப்பேசிகளை பயணிகள் முறைகேடாக கொண்டு வந்திருந்தனா். இதையடுத்து அவற்றையும் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.இதுதொடா்பாக சுங்கத்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.