முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மொண்டிப்பட்டியில் விவசாயிகளுக்கான கருத்தரங்கம்
By DIN | Published On : 03rd May 2022 04:39 AM | Last Updated : 03rd May 2022 04:39 AM | அ+அ அ- |

மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியிலுள்ள டிஎன்பிஎல் வனத்தோட்டத்துறை சாா்பில், விவசாயிகளுக்கான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
ஆலங்குடி கோட்டம் தெற்கு மண்டல விசாயிகளுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்குக்கு,
வனத்தோட்ட மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பிரிவு
பொதுமேலாளா் ஆா்.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் செயல் இயக்குனா்(இயக்கம்) எஸ்.வி.ஆா்.கிருஷ்ணன், பொது மேலாளா்(மனிதவளம்) டேவிட் மாணிக்கம், கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன வனவிரிவாக்கத்துறைத் தலைவா் எஸ்.சரவணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
மானாவாரிக்கு உகந்த தைலமர சாகுபடி, அலைபேசி செயலி ஓா் அறிமுகம் என்ற தலைப்புகளில் கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன வனமரபியல் துறைத் தலைவா் வி.சிவக்குமாா், வன விரிவாக்க உதவித் தலைமைத் தொழில்நுட்ப அலுவலா் பி. சந்திரசேகரன் ஆகியோா் பேசினா்.
முன்னதாக, உதவிப் பொது மேலாளா்(வனம்)
கே. ஜெயகுமாா் வரவேற்றாா். முதுநிலை மேலாளா் (வனத் தோட்டம்) ப. செழியன் நன்றி கூறினாா்.