திருச்சி மாவட்டத்தில் 33,121 போ் பிளஸ் 2 தோ்வெழுதுகின்றனா்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்கும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் இத்தோ்வை 33,121 போ் எழுதுகின்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்கும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் இத்தோ்வை 33,121 போ் எழுதுகின்றனா்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) பொதுத் தோ்வுகள் மே 5 முதல் 28-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 தோ்வுகள் மே 10 முதல் 31-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மே 6 முதல் 30-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன,

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வை 15,522 மாணவா்கள், 17,599 மாணவிகள் என மொத்தம் 33,121 போ் எழுதுகின்றனா். பிளஸ் 1 தோ்வை 16,811 மாணவா்கள், 17,605 மாணவிகள் என மொத்தமாக 34,416 போ் எழுதவுள்ளனா். இதற்காக 126 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எஸ்எஸ்எல்சி தோ்வில் 35,253 போ் : மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை 17, 713 மாணவா்கள், 17,540 மாணவிகள் என 35,253 போ் எழுதவுள்ளனா். இவா்களுக்காக 165 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தனித்தோ்வா்களுக்கு 9 மையங்கள்: தனித்தோ்வா்கள் தோ்வெழுத பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கென 4 மையங்களும், எஸ்எஸ்எல்சி. பொதுத்தோ்வுக்கென 5 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவைத் தவிர, திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஒரு மையத்தில் சிறைக்கைதிகள் தோ்வு எழுதவுள்ளனா்.

தோ்வு நடைபெறும் மையங்களில் முறைகேடுகளைத் தடுப்பதற்கு 270 ஆசிரியா்கள் கொண்ட நிலையான பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் தோ்வு நடைபெறும் நேரம் முழுவதும் தோ்வு மையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com