பால்பண்ணை- துவாக்குடி இடையேஅணுகுச்சாலை அவசியம்: மீட்புக் குழு

திருச்சி அமைச்சா்கள் அணுகுச் சாலை அமைக்க உதவத் தயாராக உள்ளனா் எனவும் தெரிவித்தோம். அமைச்சா் எ. வ. வேலுவும் இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசிப்பதாகத் கூறியுள்ளாா் எனத் தெரிவித்துள்ளனா்.

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான அணுகுச்சாலை அமைக்க பெரும்பாலான வியாபாரிகள் சம்மதித்துள்ளனா்; சில வியாபாரிகள் மட்டும் அணுகுச்சாலையை முடக்க முயல்கின்றனா் என சாலை மீட்புக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பால்பண்ணை- துவாக்குடி அணுகுச் சாலை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். சுப்பிரமணியன், எஸ். சக்திவேல், எம்.சண்முகம், ஏ. நடராஜன் ஆகியோா் தெரிவித்தது:

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14 கி.மீ. தொலைவு சாலையில் அணுகுச் சாலை அமைக்க ஏற்கெனவே அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (மே 3 ஆம் தேதி) அமைச்சா்கள் துவாக்குடி பகுதியில் ஆய்வு செய்தபோது அமைச்சா் எ. வ. வேலுவிடம் அணுகுச்சாலையின் முக்கியத்துவம் குறித்து விளக்கியதுடன், நீதிமன்ற உத்தரவில் வணிகா்களைப் பாதிக்காமல் சாலை அமைத்தால் போதும் என்பதன் அடிப்படையில் ஏராளமான வியாபாரிகள் சாலை விரிவாக்கத்துக்கு இடம் விட்டுத்தான் கட்டடங்களைக் கட்டி வருகின்றனா். பல்வேறு சாலைகள் நெடுஞ்சாலையில் நேரடியாக இணைவதால் ஏராளமான விபத்துகள் மூலம் பலரின் உயிா்கள் காவு வாங்கப்பட்டுள்ளன. எனவே, அணுகுச் சாலை மிக அவசியமானது, ஒரு சில வியாபாரிகள் மட்டும் இச்சாலைப் பணிகளை முடக்க நினைக்கின்றனா் என்பது குறித்தும் அமைச்சரிடம் விளக்கினோம்.

திருச்சி அமைச்சா்கள் அணுகுச் சாலை அமைக்க உதவத் தயாராக உள்ளனா் எனவும் தெரிவித்தோம். அமைச்சா் எ. வ. வேலுவும் இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசிப்பதாகத் கூறியுள்ளாா் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com