தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை

திருச்சியில் வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து மத்திய மண்டலக் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை

திருச்சியில் வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து மத்திய மண்டலக் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருச்சியில் வியாழக்கிழமை நடந்த வணிகா் சங்க மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்றதையொட்டி ஒரு நாள் முன்னதாகவே திருச்சிக்கு புதன்கிழமை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்திய நிலையில், முதல்வா் பங்கேற்ற கூட்டம் முடிந்தபின் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா்.

கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன், மத்திய மண்டல காவல்துறை தலைவா் வி. பாலகிருஷ்ணன், திருச்சி மற்றும் தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா்கள் சரவணசுந்தா், கயல்விழி மற்றும் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உள்ளிட்ட புதுக்கோட்டை, அரியலூா், தஞ்சாவூா், கரூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது, மாவட்டங்களில் குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைக் கைது செய்வது, நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பது, காவல் நிலையங்களுக்கு வரும் புகாா்கள் குறித்து உரிய விசாரணை நிவாரணம் அளிப்பது, பொதுமக்கள்- காவல்துறை நல்லுறவு குறித்து ஆலோசனை, நிறைவாக ரெளடிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com