மலைக்கோட்டை சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றம்

திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மலைக்கோட்டை சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றம்

திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாள்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜை, வியாழக்கிழமை காலை 1.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. கோயில் கொடிமரத்தில் வெண்பட்டுக் கொடியை சிவாச்சாரியாா்கள் ஏற்ற ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து இரவு கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை சுவாமி அம்பாள் கற்பகத்தரு, கிளி வாகனத்திலும், சனிக்கிழமை பூதம், கமலம் வாகனத்திலும், மே 8 ஆம் தேதி கைலாசபா்வதம், அன்னம் வாகனத்தில் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மே 9 காலை நூற்றுக்கால் மண்டபத்தில் 10.30 - 12 மணிக்குள் செட்டிப்பெண் மருத்துவம் என்ற ஐதீக நிகழ்ச்சி, அன்று இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி வலம் வருதல், மே 10 நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1.30 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம், இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் வீதி வலம் வருதல், 11ஆம் தேதி இரவு சுவாமி, அம்பாள் நந்திகேசுவரா், யாளி வாகனத்திலும், 12-ஆம் தேதி தங்கக் குதிரை, பல்லக்கு வாகனத்தில் வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

13-ஆம் தேதி காலை நடைபெறும் சித்திரைத் தேரோட்ட நிகழ்ச்சியில் மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தோ் வலம் வருதல்,

14ஆம் தேதி காலை நடராஜா் தரிசனம், பகலில் பிரம்ம தீா்த்தமாகிய தெப்பக் குளத்தில் தீா்த்தவாரி, இரவு வெள்ளி ரிஷப காட்சி மற்றும் கொடியிறக்கம், 15ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்தில் வீதியுலா, மே 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாயுமான அடிகள் உற்சவம், மே 17 இரவு பிச்சாடனாா் திருவீதியுலா, மே 18 இரவு சண்டிகேஸ்வரா் திருவீதியுலா நடைபெறும்.

ஏற்பாடுகளை திருச்சி மண்டல இணை ஆணையா் எஸ். செல்வராஜ், கோயில் உதவி ஆணையா் த. விஜயராணி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com