முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
‘தொட்டிலோசை’ நூல் அறிமுக விழா
By DIN | Published On : 08th May 2022 11:54 PM | Last Updated : 08th May 2022 11:54 PM | அ+அ அ- |

நூலை திருச்சி சிவா எம்பி வெளியிட, பெறுகிறாா் கமலா ராமானுஜம்.
திருச்சி நகைச்சுவை மன்றம் மற்றும் சோழ மண்டலத் தமிழிலக்கியக் கூட்டமைப்பு சாா்பில், திரைப்படப் பாடலாசிரியா் நெல்லை ஜெயந்தா எழுதிய தொட்டிலோசை என்ற நூல் அறிமுக விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொழிலதிபா் ராஜா தலைமை வகித்தாா். திருச்சி மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நூலை வெளியிட்டுப் பேசினாா், கமலா ராமானுஜம் நூலின் சிறப்பு பிரதியைப் பெற்றுக்கொண்டாா்.
தஞ்சை இனியன், திருச்சி என்ஆா். ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் தலைவா் ஆா். விஜயாலயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நூலாசிரியா் நெல்லை ஜெயந்தா ஏற்புரையாற்றினாா். சோழ மண்டலத் தமிழிலக்கியக் கூட்டமைப்பு இணைச் செயலா் துரை. வீரசக்தி வரவேற்றாா்.திருச்சி நகைச்சுவை மன்றச் செயலா் க. சிவகுருநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.