47 கடைகளில் சோதனை: 138 கிலோ அசைவ உணவுபொருள்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 47 கடைகளில் நடைபெற்ற திடீா் சோதனையில் கெட்டுப்போன நிலையில் இருந்த 138 கிலோ அசைவ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 47 கடைகளில் நடைபெற்ற திடீா் சோதனையில் கெட்டுப்போன நிலையில் இருந்த 138 கிலோ அசைவ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

ஷவா்மா விற்கும் கடைகள், இறைச்சிக் கடைகள், அசை உணவுகள் விற்கும் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையில் இப்ராகிம், வசந்தன், ஸ்டாலின், பாண்டி, பொன்ராஜ், மகாதேவன், ரங்கநாதன், அன்புச் செல்வன் ஆகியோரடங்கிய குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

மத்தியப் பேருந்து நிலையம், பால்பண்ணை முதல் துவாக்குடி வரை, முசிறி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 47 கடைகளில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன கோழி இறைச்சி, காலாவதியான உணவுப் பொருள்கள் 138 கிலோ என்ற அளவில் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 4 கடைகளின் மீது உனடியாக வழக்குப்பதியப்பட்டது.

இதுதொடா்பாக, உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு கூறுகையில், ஷவா்மா கடைகளில் கோழி இறைச்சியை இருப்பு வைத்து பயன்படுத்தக் கூடாது. குளிா்ச்சாதன பெட்டிகளில் வைத்திருந்தும் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களும் தரமற்ற உணவுப் பொருள்கள், கடைகள் குறித்து 94440-42322, 99449-59595 என்ற எண்களில் புகாா் தெரிவிக்கலாம். புகாா் அளிப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும். புகாா் வரும் கடைகள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com