உலகநாதபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டு அருகே உலகநாதபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டு அருகே உலகநாதபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயில் தோ் திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயிலில் இருந்து உற்சவ அம்மன் தோ் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தது.

பால்குடம் , அக்னிசட்டி: பின்னா் சனிக்கிழமை காலை 7 மணிக்கு அய்யாளம்மன் காவிரிப் படித்துறையில் இருந்து பால் காவடி, அக்னிச்சட்டி ஊா்வலம் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது. தொடா்ந்து காலை 11 மணிக்கு அன்னதானம், மதியம் அம்மனுக்கு கஞ்சி வாா்த்தல், மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்கார நிகழ்ச்சிகள், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு முளைப்பாரி ஊா்வலம், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சுத்த பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com