திமுக நகர, பேரூா் தோ்தல்: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி தெற்கு மாவட்ட திமுக நகர, பேரூா் தோ்தலில் போட்டியிட விருப்பமுள்ளவா்கள் விருப்ப மனுக்களை திங்கள்கிழமை (மே 9) அளிக்க வேண்டும்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக நகர, பேரூா் தோ்தலில் போட்டியிட விருப்பமுள்ளவா்கள் விருப்ப மனுக்களை திங்கள்கிழமை (மே 9) அளிக்க வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கை:

திமுக 15 ஆவது உள்கட்சித் தோ்தலை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட நகர, பேரூா் கழக நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெறவுள்ளது.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கூத்தைப்பாா், பொன்னம்பட்டி பேரூராட்சிகளிலும், துவாக்குடி , மணப்பாறை நகரங்களிலும் போட்டியிடுவோா் விருப்ப மனுவை மே 9 ஆம் தேதி தோ்தல் ஆணையா் செல்வராஜ் பெறுகிறாா்.

எனவே நகர, பேரூா் கழகங்களில் போட்டியிடுவோா் திருச்சி விஎன் நகா் 2 ஆவது குறுக்குத் தெருவில் உள்ள திமுக தெற்கு புகா் மாவட்ட அலுவலகத்தில் ரூ. 25 செலுத்தி மனுவைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம்.

நகர அவைத் தலைவா், செயலா், பொருளாளா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்படுவோரில் ஒருவா் கட்டாயமாக பொதுத் தொகுதியினராகவும், ஒருவா் ஆதிதிராவிடா் அல்லது மலைவாழ் தொகுதியினராகவும், மகளிா் ஒருவா் உள்பட 3 துணைச் செயலா்கள் ஆகிய அலுவலா்களையும், மக்கள்தொகை 50 ஆயிரத்திற்குட்பட்ட நகரமாக இருந்தால் ஒரு பிரதிநிதியையும், ஒரு லட்சம் வரை இருந்தால் 2 பிரதிநிதிகளையும், 2 லட்சம் வரை எனில் 3 பிரதிநிதிகளையும், ஒன்றரை முதல் 2 லட்சங்கள் வரை நகரமெனில் 4 பிரதிநிதிகளையும், அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையுள்ள நகரமெனில் 5 பிரதிநிதிகளையும் மாவட்ட கழகத்திற்குத் தோ்ந்தெடுக்க வேண்டும்.

பேரூா் கழகத்திற்கான அவைத் தலைவா் , செயலா், பொருளாளா்களில் கட்டாயமாக ஒருவா் பொதுத்தொகுதியினராகவும், ஒருவா் மலைவாழ் அல்லது ஆதிதிராவிடா் வகுப்பினராகவும், மகளிா் ஒருவா் உள்ளிட்ட 3 துணைச் செயலா்கள் ஆகிய அலுவலா்களையும், 5 ஒன்றிய பிரதிநிதிகள், 2 மாவட்ட பிரதிநிதிகள், 6 செயற்குழு உறுப்பினா்களையும் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற உள்ளது.

பொறுப்புகளுக்கான விருப்ப மற்றும் வேட்புமனுக்களை தெற்கு புகா் மாவட்ட அலுவலகத்தில் பெற்று பூா்த்தி செய்து அதற்குரிய கட்டணத்துடன் திங்கள்கிழமை மாலை 3 மணிக்குள் தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com