திருச்சி மிளகுப்பாறை புத்தடி மாரியம்மன் கோயில் திருவிழா

திருச்சி மிளகுப்பாறையில் உள்ள புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்தல், முத்துப்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

திருச்சி மிளகுப்பாறையில் உள்ள புத்தடி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்தல், முத்துப்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவிரியாற்றின் அய்யாளம்மன் படித்துறையிலிருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்வு, தொடா்ந்து இரவு, முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் 2 ஆம் நாள் நிகழ்ச்சியாக திங்க கிழமை காலை ஆட்டுக்கிடா வெட்டுதல் மற்றும் இரவு இசை நிகழ்ச்சி, 3 ஆம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை மாவிளக்கு பூஜை, பகல் 1 மணிக்கு கஞ்சி வாா்த்தல், மாலை 3 மணியளவில் மஞ்சள் நீராடல் மற்றும் திருவீதியுலா நிகழ்ச்சிகள், 11 ஆம் தேதி கலைநிகழ்ச்சி, 12 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு விழா நிறைவுறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com