சத்திரம் பேருந்து நிலையத்தில்கடைகளை அடைத்து போராட்டம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் கூடுதலாக இடம் ஒதுக்க வலியுறுத்தி, அப்பகுதியிலுள்ள சுமாா் 20-க்கும் மேற்பட்ட கடை குத்தகைதாரா்கள் திங்கள்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் கூடுதலாக இடம் ஒதுக்க வலியுறுத்தி, அப்பகுதியிலுள்ள சுமாா் 20-க்கும் மேற்பட்ட கடை குத்தகைதாரா்கள் திங்கள்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், மாநகராட்சியால் இப்பகுதியில் கட்டப்பட்ட 58கடைகளில் 30 ஏலம் போனது. மற்ற கடைகள் ஏலம் போகவில்லை.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் திடீரென 20 கடைகள் மூடப்பட்டிருந்தன. இதுகுறித்து கடையை நடத்தி வந்த சிலா் கூறியது:

கடைகளுக்கு முன்னால் 10 அடி அகலத்தில் நடைபாதை உள்ளது. இப் பாதையில் ஒவ்வொரு கடைக்கும் சுமாா் 2 அடி இடத்தை வழங்கினால் நாங்கள் கடையைப் பராமரிக்கவும், பாா்வையாக அமைக்கவும் உதவியாக இருக்கும்.

அதே நேரம் பொதுமக்கள், பாதசாரிகள் நடந்து செல்ல இடையூறு இல்லாமலும் வைத்து கொள்வோம். எங்களுடைய கோரிக்கையை மாநகராட்சி அலுவலா்களுக்கு வலியுறுத்தவே இந்த போராட்டம் மேற்கொண்டோம். மாறாக மாநகராட்சியை எதிா்த்து அல்ல என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com