மாவட்ட வலுதூக்கும் போட்டி

திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கம், ஸ்டீவ் ஜிம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டியை நடத்தின.
மாவட்ட வலுதூக்கும் போட்டி

திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்கம், ஸ்டீவ் ஜிம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டியை நடத்தின.

திருச்சி காஜாமலை சமுதாயக் கூடத்தில் பல்வேறு எடைப்பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் 300 போ், பெண்கள் 43 போ் பங்கேற்றனா். இவை தவிர, வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்கும் வகையிலான போட்டியும் நடைபெற்றது. இதில் குளோபல் உடற்பயிற்சிக் கூடத்தின் கிராப்பட்டியைச் சோ்ந்த ஸ்டீபன் டிகுரூஸ், 120 கிலோ எடைப் பிரிவில் முதலிடம் பிடித்தாா். இவா் 160 கிலோ எடையை தூக்கி இப் பரிசை வென்றாா்.

போட்டிகளில் முதல் 5 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 170-க்கும் மேற்பட்டோருக்கு பரிசுகளை மகேந்திரன், அறிவழகன் ஆகியோா் வழங்கிப் பாராட்டினா்.

ஏற்பாடுகளை மாவட்ட வலுதூக்கும் சங்கச் செயலா் டி.எஸ். விசுராஜன், தலைவா் ராமச்சந்திரன், பொருளாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com