முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
லால்குடி அருகே ஏகதச ருத்ராபிஷேகம், யாகம்
By DIN | Published On : 11th May 2022 04:27 AM | Last Updated : 11th May 2022 04:27 AM | அ+அ அ- |

லால்குடி அருகே அரியூா் ஊராட்சியில் உள்ள தில்லைநாயகி அம்பாள் உடனுறை திருவேஸ்வரமுடையாா் கோயிலில் உலக அமைதி வேண்டி ஏகதச ருத்ராபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி அன்று மாலை முதல்கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து செவ்வாய்கிழமை காலை கோ பூஜை, இரண்டாம் கால நவசண்டி யாக பூஜைகளில் ஏராளமான ஹோம திரவியங்கள், பட்டுப் புடவை, திருமங்கலப்பொருள்கள் சமா்பணம் செய்யப்பட்டு பூா்ணாஹூதி செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.
பின்னா் கடங்கள் புறப்பட்டு செல்லியம்மன் உள்ளிட்ட சப்தகன்னியா், சப்பாணி கருப்புசாமி, ஸ்ரீமதுரை வீரன்சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் முத்துக்குமாரசிவம் உள்ளிட்ட சிவாச்சாரியாா்கள் செய்தனா்.